ப்ளூ சட்டையே இப்படி சொல்லிட்டாரே; குடும்பஸ்தன் படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ
Kudumbasthan Movie Review : ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள குடும்பஸ்தன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் மணிகண்டன். தொடர்ந்து தரமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் ஜெய் பீம் படம் மூலம் தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கண்கலங்க வைத்த மணிகண்டன், அதன்பின்னர் குட் நைட் என்கிற ஃபீல் குட் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். பின்னர் லவ்வர் படத்தின் மூலம் இளைஞர்களையும் வெகுவாக கவர்ந்த மணிகண்டன் அடுத்ததாக குடும்பங்களை கவரும் வகையில் நடித்துள்ள படம் தான் குடும்பஸ்தன்.
இப்படத்தை ராஜேஸ்வர் காளிசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக சான்வி மேக்னா நடித்துள்ளார். மேலும் குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு வைஷாக் இசையமைத்துள்ளார். இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி உள்ளது. படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனங்களை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் தொகுப்பை பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்... மனைவி மீது கை வைத்த இளைஞர்கள்: மாஃபியா டான் லீடர் செஞ்ச தரமான சம்பவம்: பணி படம் எப்படி?
குடும்பஸ்தன் செம்ம காமெடியா இருக்கு, கண்டிப்பா தியேட்டர்ல பாக்குறதுக்கு செம ஒர்த் ஆன படம். நிறைய சீன்கள் நம்முடைய லைஃப்ல கனெக்ட் பண்ணிக்க முடியும். மணிகண்டனின் நடிப்பு வேற லெவல் என பாராட்டி பதிவிட்டுள்ளார்.
குடும்பஸ்தன் உண்மையிலேயே பொழுதுபோக்கான குடும்ப படம், படம் முழுக்க நம்மோட வாழ்க்கையோடு கனெக்ட் செய்துகொள்ளும் காமெடி உள்ளது. மிடில் கிளாஸ் பையன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொறுந்தி இருக்கிறார் மணிகண்டன். படத்தின் கதாபாத்திர தேர்வும் கச்சிதமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
குடும்பஸ்தன் படத்தின் முதல் பாதி முடிவடைந்தது. இப்போதே சொல்கிறேன். தயவு செய்து குடும்பத்துடன் டிக்கெட் புக் செய்து இந்த கமர்ஷியல் காமெடி திரைப்படத்தை கண்டு சந்தோஷம் அடையுங்கள். நம்மை சுற்றியே இவளோ சிறப்பான கதை இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள் என பாராட்டி இருக்கிறார்.
ப்ளூ சட்டை மாறனே இப்படத்தை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். படத்தின் அனைத்து சீன்களுமே காமெடியாக இருப்பதாகவும், சிக்கலான கதையை இவ்வளவு விறுவிறுப்பாக கொடுத்துள்ளது ஆச்சர்யமாக இருந்ததாக கூறிய அவர், படம் இவ்வளவு விறுவிறுப்பாக இருந்ததற்கு முக்கிய காரணம் அதன் டயலாக் என பாராட்டி தள்ளி இருக்கிறார் ப்ளூ சட்டை.
குடும்பஸ்தன் படத்தின் மணிகண்டனின் நடிப்பு பார்க்க அற்புதமாக உள்ளது. ஆர்.சுந்தர்ராஜனுக்கும் சிறப்பான ரோல். தொடர்ந்து வரும் காமெடி காட்சிகளால் படம் எந்தவித டல்லும் அடிக்காமல் நகர்கிறது. பேக்கரி எபிசோடு மட்டும் இழுவையாக இருக்கிறது. எமோஷனலான ப்ரீ கிளைமாக்ஸ் காட்சிகள் அருமை. டீசண்டான, சிம்பிளான, நகைச்சுவையான பேமிலி எண்டர்டெயினர் தான் இப்படம் என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... கம்பேக் கொடுத்தாரா கெளதம் மேனன்? டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் விமர்சனம்