இந்தப் படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மணிரத்னத்தின் சிஷ்யர் தனா, இந்தப் படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், ஐஸ்வர்யா ராஜேஸ், மடோனா செபாஸ்டியன் என இரு ஹீரோயின்கள் நடித்து வருகின்றனர். 
சரத்குமார் - ராதிகா சரத்குமார் ஆகியோரும் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இவ்விருவரும் ஒரே படத்தில் இணைந்து நடிப்பதுதான் ஹைலைட். மேலும், சாந்தனு பாக்கியராஜ், பாலாஜி சக்திவேல் உள்பட பலர் நடித்து வருகின்றனர். 'வானம் கொட்டட்டும்' படத்தின் மூலம் பிரபல பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். 

இந்நிலையில், 'வானம் கொட்டட்டும்' படத்தின் டைட்டில் லுக்கை நேற்று படக்குழு வெளியிட்டிருந்தது. கருப்பு வெள்ளை வண்ணத்தில் காண்போரை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த வானம் கொட்டட்டும் டைட்டில் லுக், சமூகவலைதளங்களில் லைக்ஸை அள்ளி வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, படத்தின் ஃபர்ஸ்ட் லுக், இன்று நவம்பர் 13ம் தேதி காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. முதலில் டைட்டில், அடுத்து ஃபர்ஸ்ட் லுக் பற்றிய அறிவிப்பு என ஒரே நாளில் அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்கடாச் செய்துள்ளார் இயக்குநர் மணிரத்னம். மேலும், விரைவில் 'வானம் கொட்டட்டும்' படத்தின் பாடல்கள் வெளியாகவுள்ளதாகவும், சித்ஸ்ரீராமின் இசையை ரசிக்க தயராக இருங்கள் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.