sonam kapoor mangal suthra chenged like breslet
பாலிவுட் நடிகை சோனம்கபூர் சமீபத்தில் தன் காதலர் ஆனந்த் அஹுஜாவை மணந்தார். திருமணத்திற்கு பின் தன் பெயரை சோனம் கபூர் அஹுஜா என்ப் பெயர் மாற்றம் செய்து கொண்டார்
தற்போது இவர் வீர் தி வெட்டிங் என்னும் புகைப்பட நிகழ்ச்சியில் கல்ந்து கொண்டு வருகிறார் அதில் தாலியை கழட்டி பிரேஸ்லெட் போல் அணிந்து போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார்.
சோனம்கபூரின் இந்த போட்டோவைப் பார்த்து பலரும் காதில் புகைவர அவரை தீட்டி தீர்த்து வருகின்றனர். குடும்பம் கலாச்சாரம் பாரம்பரியம் என விடாமல் பேசும் இந்தியாவிற்கு இவரது இச்செயல் மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாட்டில் வளர்ந்ததால் நம் நாட்டில் பண்பாடு புரியவில்லையென சமூக வலைதளங்களில் பலர் இவரை விமர்சித்துள்ளனர்.
பலர் புது ட்ரெண்டாக கருதி வரவேற்பும் பலமாக இருக்கவே செய்கிறது. இவர்களில் பலர் சோனம்கபூர்க்கு ஆதரவாக கருத்துகளை கூறிவருகின்றனர். ‘சோனம் கபூரின் கணவரே எதும் சொல்லாதபோது நீங்கள் ஏன் தையா தைக்கான்னு குதிக்கிறீங்க’ என கேட்டு விரட்டியடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
மொத்தத்தில் சோனம் கபூர்க்கு ஆதரவும் எதிர்ப்பும் சம அளவில் இருந்து வருகிறது.
