Mandira Bedi is a villi for the heroine of Bahubali hero...
பிரபாஸ் நடிக்கும் ‘சாஹோ’ படத்தில் வில்லியாக நடிகை மந்தரா பேடி நடிக்கிறார்.
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் தற்போது நடித்து வரும் படம் ‘சாஹோ’.
இந்தப் படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு கூடி இருக்கிறது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் தயாராகிறது.
இந்தப் படத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த ஷ்ரத்தா கபூர் ஹீரோயினாக நடிக்க, நீல் நிதின் முகேஷ் வில்லனாக நடிக்கிறார்.
மேலும், ஜங்கி பாண்டே, ஜாக்கி ஷெராஃப், மகேஷ் மஞ்ரேகர், மந்த்ரா பேடி, டின்னு ஆனந்த் ஆகிய ஐந்து பாலிவுட் நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தில் நடிகை மந்தரா பேடி, பிரபாஸுக்கு வில்லியாக நடிக்கவுள்ளார் என்பது கொசுறு தகவல்.
