man who filed case against kaala got beaten
ரஜினிகாந்த் நடிக்கும் காலா படத்தின் கதை தன்னுடையது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவருக்கு, அடி உதை விழுந்தது. கொலை மிரட்டல் விடுத்து வழக்கை வாபஸ் வாங்க சொன்னதாக காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர், புகார் அளித்துள்ளார்.
கபாலி படத்துக்கு பிறகு ரஜினி நடித்து வரும் படம் “காலா கரிகாலன்”. இப்படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். ரஞ்சித் இயக்கி வருகிறார்.
இந்த படம் தொடங்கியது முதலே சர்ச்கையை கிளப்பி வருகிறது. மும்பை தாதா ஒருவரின் கதை என கூறப்பட்டது. அவரது உறவினர்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், பிரச்சனை எழுந்தது.

அதன்பின்னர் காரம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகரன் என்பவர், காலா கரிகாலன் படத்தின் கதை தன்னுடையது என வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் ராஜசேகரன், புகார் ஒன்றை அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகரன், கடந்த 11ம் தேதி சென்னையில் இருந்து கடலூருக்கு தனது தம்பி வாசனுடன் சென்ற தன்னை, கூடுவாஞ்சேரியில், அறிமுகம் இல்லாத 4 நபர்கள், மடக்கி தரக்குறைவாக பேசி, தாக்கி வழக்கை வாபஸ் வாங்க சொல்லி, மிரட்டியதாகவும், இதுபற்றி கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தும் வாங்க மறுத்ததால், காஞ்சிபுரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்தார்.
