டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் மேன் Vs வைல்ட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவதன் மூலம்,  உலகம் முழுவதும் பிரபலமானவர் பியர் கிரில்ஸ். காடு, மலை, நீர் நிலைகள் போன்ற இடங்களில் மனிதன், மாட்டிக்கொண்டால் கையில் உள்ள உபகரணங்களை வைத்து, தப்பி வருவது எப்படி என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் விளக்கி வருகிறார்.

ஏற்கனவே பாரத பிரதமர் மோடி, பியர் கிரில்ஸ்சுடன் காட்டுக்குள் சென்று அவருடன் பயணித்தது, மிகவும் வைரலாக பார்க்கப்பட்டது. இதை தொடர்ந்து, பியர் கிரில்ஸ்டன் ஜனவரி மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பயணம் மேற்கொண்டார்.

ஹைதராபாத்தில் உள்ள பந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் ரஜினிகாந்த் கலந்து கொண்ட மேன் vs வைல்ட் நிகழ்ச்சியின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி முடிவடைந்து சில நாட்கள் ஆகும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியை விரைவில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக தயாராகி வருகிறார்கள் நிகழ்ச்சியாளர்கள்.

இதுகுறித்து தெரிவிக்கும் பொருட்டு இந்த நிகழ்ச்சியின் டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் பியர் கிரில்ஸ்சுடன் சேர்ந்து, ரஜினிகாந்த் நிற்பது போலவும்... நெருப்பு பறப்பது போலவும் உருவாக்கியுள்ளனர். இந்த டீசர் தற்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில், வைரலாகி வருகிறது.

விரைவில் ரஜினி பியர் கிரில்ஸ்சுடன் சேர்ந்து பயணித்த இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. ஆனால் எப்போது என்பது குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

தற்போது வெளியாகியுள்ள டீசர் இதோ...