மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் யுஏஇ அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் யுஏஇ அரசு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

யுஏஇ வழங்கும் கோல்டன் விசா என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. தங்களுடைய துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கௌரவத்தை கொடுத்து வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். அந்த வகையில் தற்போது, மலையாளம் மற்றும் தமிழ் திரையுலகில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகர்களாக வலம் வரும் மம்முட்டி மற்றும் மோகன்லாலுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாவுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் ஐக்கிய சிட்டிசன்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள். இந்த விசா ஒவ்வொருவருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் வைத்திருக்கும் நிலையில், அவர்களைத் தொடர்ந்து மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர்களுக்கு இந்த கவுரவம் கிடைத்துள்ளது.

தற்போது இந்த விசாவை பெற மோகன்லால் துபாய் புறப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இவரைத் தொடர்ந்து விரைவிலேயே மம்முட்டியும் துபாய் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வெளியே வர ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் இவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.