mallika sharawath tweet for simbu
நடிகர் சிம்பு என்றால் எப்போதுமே பிரச்சனை தான், பொதுவாகவே சிம்பு மிகவும் நல்ல மனிதர் ஆனால் என்ன நேரமோ அவர் எதாவது ஜாலியா செய்தால் கூட சில சமயங்களில் அது மிகப் பெரிய சர்ச்சையாக மாறிவிடுகிறது.
பீப் சாங் பாடி சர்ச்சையான பிறகு அனைத்து விஷயங்களிலும் அடக்கி வாசித்து வரும் சிம்பு எந்த பிரச்சனையிலும் சிக்காமல் நல்ல பிள்ளை என்று தான் பெயர் எடுத்து வந்தார். இதனால் சூட்டோடு சூடாக சிம்புவுக்கு திருமணத்தையும் நடத்தி விட வேண்டும் என சிம்புவின் பெற்றோரும் தீவிர பெண் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில் தான் திடீர் என துளிர் விட்டுள்ளது 'AAA' பட பிரச்சனை... படத்தின் தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் ஒரு பக்கம் சிம்பு திருந்தவே மாட்டார், தன்னிடம் படத்திற்கான முன்பணத்தைப் பெற்றுக்கொண்டு சரியான நேரத்திற்கு படப் பிடிப்பில் கலந்துகொள்ளாமல் படத்தை தோல்விப்படமாக மாற்றி விட்டார் என்று கூற, மறு புறம் படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் தனக்கு சிம்பு முழு ஒத்துழைப்பு கொடுக்காமல் அவருடைய இஷ்டத்திற்கு படத்தின் கதையை மாற்றி அமைத்ததால் தான் படம் தோல்வியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சனை தற்போது சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ரெட் கார்டு போடும் அளவிற்கு மாறியுள்ளது. இந்நிலையில் சிம்புவுடன் ஒஸ்தி படத்தில் இடம்பெற்ற கலாசலா கலாசலா என்ற பாடலில் நடனம் ஆடிய பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் ஒரு டுவிட் செய்துள்ளார்.
அதில் அப்பாடல் படப்பிடிப்பு மிகவும் ஜாலியாக இருந்ததாகவும் சிம்புவுடன் நடனம் ஆடியது நன்றாக இருந்தது என டுவிட் செய்துள்ளார்.
