malaysiya star function avoid celebraties

தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்துக்கு, நிதி திரட்டும் வகையில், மலேஷியாவில் நட்சத்திர கலை விழா நடத்தப்பட்டது. இதில் ரஜினி, கமல், விஷால், விஜயசேதுபதி, ஜெயம் ரவி, சூர்யா, கார்த்தி மற்றும் ஏகப்பட்ட இளம் நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.

கலை நிகழ்சிகள் ஆடல், பாடல் ஒரு பக்கம் பட்டையை கிளப்ப, மற்றொரு பக்கம் நட்சத்திர கிரிகெட், கால் பந்து போட்டி என நடிகர்கள் ரசிகர்களை கவர்ந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நடிகர் விஜய், தனுஷ், பிரபுதேவா... உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொள்ள வில்லை. எப்படியும் அஜித் கலந்துக்கொள்ள மாட்டார் என ஏற்கனவே அனைவரும் அறிந்தது தான் அதனால் அதை பலருக்கும்க் வியப்பாக இல்லை.

கலை நிகழ்ச்சியில் பேசிய, நடிகர் ரஜினிகாந்த் அரசியல் நோக்கத்துடனே 'என்னை வாழ வைத்த தமிழக மக்களை, நன்றாக வாழ வைக்க வேண்டும் என்பதே என் அதிகபட்ச ஆசை என தெரிவித்தார்.

மேலும் கலைநிகழ்ச்சியில் ஆடிய நடிகைகள்... முறையாக நடன பயிற்சி எடுக்காமல் ஏனோ தானோ என்று ஆடியதாகவும் இதனால் ரசிகர்கள் சற்று அதிருப்தியுடன் சென்றதாகக் கூறப்படுகிறது.