கொச்சியில் உள்ள எலமக்கரா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மஞ்சுவாரியரின் புகார் அடிப்படையில் காவலர் குழு சனல்குமார் சசிதரனை கைது செய்தனர்.
தனுஷின் அசுரன் படத்தில் நாயகியாக நடித்த மஞ்சுவாரியர் மலையாள திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர். பல ஹிட் படங்களில் நடித்துள்ள மஞ்சு வாரியார் தற்போது நடிகை கடத்தல் வழக்கில் வசமாக சிக்கியுள்ள திலீப்பின் முன்னாள் மனைவியாவார். அதோடு அவருக்கு எதிரான சாட்சியாகவும் சேர்க்கப்பட்டுள்ளார். இதனால் நடிகை மஞ்சு வாரியருக்கு எதிராக அவர் முழு நேர போதை அடிமை என கோர்ட்டில் கூற திலீப்பின் தம்பிக்கு ட்ரைனிங் கொடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இதை தொடர்ந்து பிரபல இயக்குனர் மஞ்சு வாரியார் குறித்து பதிவிட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி இருந்தது..பிரபல மலையாள இயக்குனரான சணல் குமார் சமீபத்தில் தனது பேஸ்புக் பக்கத்தில் : “நடிகை மஞ்சு வாரியர் கந்துவட்டிக்காரர்கள் சிலரின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. இதுகுறித்து சோசியல் மீடியாவில் நான் பதிவிட்டு 4 நாட்கள் ஆகிறது. ஆனால் இதுவரை மஞ்சு வாரியரோ, அவருக்கு நெருக்கமானவர்களோ இதுகுறித்து பதிலளிக்கவில்லை. என குறிப்பிட்டு பகிர் கிளப்பி இருந்தார்.

அதோடு நடிகை மஞ்சு வாரியரின் மௌனம் எனக்கு சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. மலையாள திரையுலகில் பாலின சமத்துவத்திற்காக செயல்படும் Women in Cinema Collective என்கிற அமைப்பிற்கும் மின்னஞ்சல் அனுப்பினேன். அவர்களும் இவ்விவகாரத்தில் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றனர். மிகத் தீவிரமான இந்த பிரச்சனையை பலரும் நகைச்சுவையாகப் பார்க்கின்றனர். என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தன்னை சசிதரன் மிரட்டுவதாகவும், சோசியல் மீடியாவில் களங்கம் ஏற்படுத்தியதாகவும் கொச்சியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படியில் தற்போது மலையாள திரையுலகின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான சனல்குமார் சசிதரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

