Ali Akbar : பிபின் ராவத் மரணத்தை கொண்டாடுவதா? மதம் மாறிய மலையாள டைரக்டர் அலி அக்பர்…
Malayalam film director Ali Akbar has converted to Hinduism : மலையாள திரையுலகில் அறியப்பட்ட இயக்குனர் அலிஅக்பர் இவர் ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளார்.
கோவை சூலூர் விமானப் படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ மையத்துக்கு பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் காட்டேரி பார்க் என்ற இடத்தில் மலைமுகட்டில் சிக்கி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 14 வீரர்களில் 13 பேர் உடல் கருகி உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தெரிவித்திருந்தது.
இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விபத்திற்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என்று விமானப்படை தெரிவித்துள்ளது.
முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகாவின் உடல்கள் ராணுவ முழு மரியாதையுடன் 17 சுற்று பீரங்கி குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செய்யபட்டு, உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் பிபின் ராவத் மறைவு குறித்து வெளியான செய்திகளில் சிலர் மகிழ்ச்சி குறியீட்டுடன் கமெண்ட் செய்துள்ளனர். இதனால் கடுப்பான முஸ்லீம் இயக்குனர் ஒருவர் தனது மதத்தையே மாற்றியுள்ளார்.
மலையாள திரையுலகில் அறியப்பட்ட இயக்குனர் அலிஅக்பர் இவர் ஜெனரல் பிபின் ராவத் மரணத்தை இந்தியாவை சேர்ந்த இஸ்லாமியர்கள் கொண்டாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இஸ்லாமில் இருந்து இந்து மதத்துக்கு மாறியுள்ளார். அதோடு அலிஅக்பர் என்கிற தனது இயற்பெயரை ராமசிம்கா என மாற்றிவிட்டதாக தெரிவிதித்துள்ளார்.