malayalam child actress introduce in heroine

மலையாளத்தில் கிட்ட திட்ட 50 திற்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் எஸ்தர்.

பெரும்பாலும் ஹீரோயின்களின் குழந்தை பருவத்திலும், ஹீரோயின்களுக்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட் ஆன 'த்ரிஷ்யம் 'படத்திலும் நடித்தார். இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் கமலஹாசனுக்கு இரண்டாவது மகளாக நடித்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது 10ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ள, எஸ்தர் முதல் முறையாக தமிழில் 'குழலி' என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார்.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சேர கலையரசன் என்பவர் இயக்குகிறார், எஸ்தர் இந்த திரைப்படத்தில் குழலி என்கிற 10 வகுப்பு படிக்கும் மாணவியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.