பிரபல மலையாள நடிகர் ரிஸபாவா என்பவர், ரூ.11 லட்சம் மோசடி செய்த வழக்கில், அவருக்கு வித்தியாசமான தண்டனையை கோர்ட் வழங்கியுள்ளது பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

மலையாளத்தில் பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ரிஸாபாவா. தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர், சாதிக் என்பவரிடம் ரூ.11 லட்சம் கடனாக பெற்றுள்ளார். வெகு நாட்கள் ஆகியும் பணத்தை கட்டாமல் இழுக்கடித்து வந்த இவர், பணம் இல்லாத வங்கி காசோலை ஒன்றை கொடுத்து சாதிக்கை ஆயக்காட்டியுள்ளார்.

இந்த செக் பவுன்ஸ் ஆனதால், சாதிக் இது குறித்து நீதிமன்றத்தில்  மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் உரிய கால அவகாசத்திற்குள், சாதிக்கிற்கு சேர வேண்டிய தொகையை, மலையாள நடிகர் ரிஸாபாவா கொடுக்க வேண்டும் என்றும், மீறும் பட்சத்தில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து, ரிஸபாவா... உரிய கால அவகாசத்தில் பணத்தை காட்டாமல், நேரம் தாமதித்து சாதிக்கிற்கு சேரவேண்டிய பணத்தை நீதிமன்றத்தில் கட்டியுள்ளார். உரிய நேரத்தில் பணம் செலுத்தாததால், கோர்ட் ஒரு நாள் முழுவதும் ரிஸபாமா நீதி மன்றத்தில் இருக்க வேண்டும் என வித்தியாசமான தண்டனையை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.