malayalam actress meet chief minister
மலையாள திரையலகில் டப்பிங் ஆர்டிஸ்ட்டாகவும், குணச்சித்திர நடிகையாகவும் இருப்பவர் நடிகை பாக்யலட்சுமி.
இவர் தொன்னூறுகளில், நடிகை ஷோபனா, ரேவதி, மீனா, அமலா, சௌந்தர்யா, ரம்யாகிருஷ்ணன் என பல முன்னணி நடிகைகளுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
அதுமட்டுமல்ல சமூக சேவைகளில் ஈடுபடுள்ள பாக்யலட்சுமி பொதுப்பிரச்சனைகளில் தலையிட்டு ஆதரவற்றோருக்கு, பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கிடைக்கவும் போராடி வருகிறார்.
சமீபத்தில் மலையாள திரையுலகில் பணியாற்றும் பெண்கள், குறிப்பாக நடிகைகள் உட்பட பெண்களுக்கான பாதுகாப்பு இயக்கம் ஆரம்பிக்க முடிவெடுத்தார்கள். இதில் ஆரம்பத்தில் இருந்தே ஆலோசனைகள் தந்து, முன்னின்று தீவிரமாக செயலாற்றியவர் இந்த பாக்யலட்சுமிதான்.
இந்த அமைப்பை துவக்கிய நடிகைகள் மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல் உள்ளிட்டோர் நேற்று கேரள முதல்வர் பினராயி விஜயனை இது தொடர்பாக சந்திக்க சென்றனர்..ஆனால் தாங்கள் செல்லும் விபரத்தை பாக்யலட்சுமிக்கு இவர்கள் யாருமே தெரியப்படுத்தவும் இல்லை.
அவருக்கு அழைப்பும் விடுக்கவில்லை. முதல்வரை அவர்கள் சந்தித்து விட்டு வந்தபின், அது செய்தியாக வெளியாகி எல்லோரையும் போலத்தான் பாக்யலட்சுமிக்கும் தெரியவந்ததாம்.
இதுபற்றி பாக்யலட்சுமிக்கு திரையுலகை சேர்ந்தவர்கள் நிறைய பேர் போன் செய்து நீங்கள் ஏன் அந்த குழுவில் இடம்பெறவில்லை என கேட்க ஆரம்பித்து விட்டார்களாம். மஞ்சு வாரியார், ரீமா கல்லிங்கல் ஆகியோரின் செயலால் பாக்யலட்சுமி வருத்தம் அடைந்தாலும் கூட, புதிய அமைப்பிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
