malayalam actress anusree cook for team

ஷூட்டிங் ஸ்பார்டில் சீன் போடும் நடிகைகள் மத்தியில், பிரபல மலையாள நடிகை அனுஷ்ஸ்ரீ செய்த காரியம் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. 

நடிகை அனுஷ்ஸ்ரீ:

நடிகை அனுஷ்ஸ்ரீ மலையாளத்தில் வெளிவந்து ஹிட் ஆன மோகன்லால் நடித்த டைமண்ட் நெக்லஸ் , பகத்பசில் நடித்த ரெட் ஒய்ன், இதிஹாச உள்ளிட்ட 30 கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 

மேலும் ஏசியா நெட் மலையாளம் தொலைக்காட்சியில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒளிபரப்பான 'காமெடி ஸ்டார்ஸ் சீசன் 2' வில் நடுவராகவும். ஏசியா நெட் எடுத்த டெலிபிலிம் '6 பீஸ் பீசா' என்கிற படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமையல் செய்த அனுஷ் ஸ்ரீ;

பொதுவாக நடிகைகள் தங்களுக்கான படபிடிப்பு முடிந்ததும், கேரவனுக்கு சென்று ஓய்வு எடுப்பது தான் வழக்கம். அதிலும் கொஞ்சம் பிரபலமானவர் என்றால் ஆப்பில் ஜூஸ் அவர்களை தேடி செல்லும் என்று தான் கேள்வி பட்டிருப்போம்.

ஆனால் நடிகை அனுஷ்ஸ்ரீ சற்று வித்தியாசமானவராக இருக்கிறார். இவர் தனக்கான படப்பிடிப்பு முடிந்ததும் முதல் வேலையாக சமைக்கும் இடத்திற்கு தான் செல்வாராம். அங்கு வேலை செய்துக்கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு தன்னால் முடிந்த சின்ன சின்ன உதவிகளை செய்வாராம்.

அதுபோல் தற்போது இவர் தோசை சுடுவதற்கு உதவிய காட்சி தற்போது வைரலாகி வருகிறது. இவர் இப்படி செய்ததை ரசிகர்கள் பலர் தொடர்ந்து பாராட்டி வருகின்றனர்.