பிரபல தயாரிப்பாளர் PKR பிள்ளையின் மகனும் நடிகருமான சித்துவின் உடல் கோவா கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 27 வயதாகும் சித்து கடந்த 12 ஆம் தேதி கோவா சென்றதாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் யாருடன் சென்றார், இவருடைய மரணத்திற்கு யார் காரணம் என்பது மர்மமாகவே உள்ளது. 

இவர் நடிகர் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடித்து வெளிவந்த 'செகண்ட் ஷோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த படத்தில் சித்துவின் நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது.

இந்நிலையில் இவர் இறந்த செய்தி மலையாள திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய மரணத்திற்கு துல்கர் சல்மான் தன்னுடைய இரங்கலை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதே போல் பல பிரபலங்கள் இவருடைய குடும்பத்தினருக்கு தொடர்ந்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

இவருடைய மர்ம மரணத்திற்கு காரணம் என்ன? என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.