தற்போது வீட்டில் இருந்தபடி மாளவிகா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் மாளவிகா பார்ப்பதற்கு சற்று உடல் எடை கூடி இருப்பது கண்கூடாக தெரிகிறது
ஸ்வேதா கொன்னூர் மேனன்:
ஸ்வேதா கொன்னூர் மேனன் என்னும் பெயரை சினிமாவிற்காக மாளவிகா என மாற்றிக்கொண்டார்.தமிழ் திரைப்படங்களிலும் சில தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத் திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார் மாளவிகா. அஜித்துடன் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மாளவிகா ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், வெற்றிக்கொடிகட்டு, பேரழகன், ஐயா என பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

'வாழ மீனுக்கும்' மாளவிகா :
மாளவிகா இயக்குனர் மிஸ்கின் அறிமுகமான சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற 'வாழ மீனுக்கும்' பாடலுக்கு போட்டிருந்த குத்தாட்டம் இன்றளவும் ரசிகர்கள் மனதில் ஆழப் பதிந்துள்ளது. இந்த பாடலை கானா உலகநாதன் பாடியிருந்தார். இரண்டாயிரத்துக்கு பிறகு பெரும்பாலான படங்களில் சிறப்பு தோற்றத்தில் மட்டுமே வந்து சென்ற மாளவிகா விஜய்யின் குருவி, ஆயுதம் செய், ஆறுபடை உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்திருந்தார். தற்போது மிர்ச்சி சிவா, ஜீவா இணைந்து நடித்துள்ள கோல்மால் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா திருமணம் :
ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகளை சரிவர கிடைக்காத நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு தொழிலதிபர் சுமேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்ட மாளவிகா பின்னர் மெல்ல மெல்ல நடிப்பதை குறைத்து கொண்டு குடும்ப வாழ்வில் கவனம் செலுத்த துவங்கினார். இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் நாற்பத்தி இரண்டு வயதை கடந்த மாளவிகா தற்போது ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். அதோடு அவ்வப்போது சூடான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

ஹாட் போட்டோ சூட் :
ஏற்கனவே நீச்சல் குளத்தில் குளித்த படி அவர் கொடுத்திருந்த போட்டோ ஷூட் கவர்ச்சி குறையாமல் ரசிகர்களின் லைக்குகளை அள்ளிச் சென்றது. இந்நிலையில் தற்போது வீட்டில் இருந்தபடி மாளவிகா ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் மாளவிகா பார்ப்பதற்கு சற்று உடல் எடை கூடி இருப்பது கண்கூடாக தெரிகிறது.
