மாளவிகா மோகன்:

தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' படத்தில் சிறு ரோலில் நடித்த நடிகை மாளவிகா மோகனுக்கு, ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படத்திலேயே அடித்தது ஜாக்பார்ட். முன்னணி நடிகைகள் கூட, மறுக்காமல் ஓகே சொல்லும் தளபதிக்கு நாயகியாக இந்த படத்தில் நடிக்கிறார்.

மாஸ்டர்:

இந்த திரைப்படம் ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியாக இருந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு p காரணமாக, வெளியிடப்படாமல் போனது. மேலும் ஏற்கனவே 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பித்த நிலையில், மீண்டும் மே மாதம் 3 ஆம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. எனவே மே மாதம் அல்லது அதற்கு பிறகே 'மாஸ்டர்' படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தற்போது 'மாஸ்டர்’ படத்தில் நாயகியாக நடித்துள்ள,  மாளவிகா மோகனுக்கு, டப்பிங் கொடுத்துள்ள நடிகை பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

'ஒரு கிடாயின் கருணை மனு' படத்தில் கதாநாயகியாக நடித்த, நடிகையும் பிரபல டாப்பிக் கலைஞருமான, ரவீனா தான், 'மாஸ்டர்' படத்தில் நடிகை மாளவிகா மோகனுக்கு குரல் கொடுத்துள்ளாராம். மாளவிகா மோகனுக்கு ரவீனாவின் குரல் கன கட்சிதமாக பொறுத்தியுள்ளதாக படக்குழுவினர் வட்டாரத்தில் கூறப்படுகிறது. படம் பர்பெக்ட்டாக உருவாகி இருந்தாலும் இதுவரை படம் வெளியாகாமல் உள்ளது தான் விஜய் ரசிகர்களின் மிகப்பெரிய வருத்தம்.