நடிகர் சூர்யா, இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள 'NGK ' திரைப்படம் அடுத்த மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி.ஆனந்த், இயக்கத்தில் 'காப்பான்' படத்தின் நடித்தார் . இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இதை தொடர்ந்து சூர்யா 'இறுதிசுற்று' பட இயக்குனர் சுதா கங்கோரா இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் நன்றாக வரவேண்டும் என இயக்குனர் சுதா கங்கோரா மற்றும் நடிகர் சூர்யா ஆகியோர் அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவிற்கு சென்று வழிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் துவங்கியது. இதில் இந்த படத்தின் நாயகன் சூர்யா, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் கார்த்தி, இயக்குனர் சுதா கங்கோரா மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ள மலையாள நடிகை அபர்ணாவும் கலந்து கொண்டுள்ளார். தொடர்ந்து முன்னணி நடிகைகளுடன் மட்டுமே ஜோடி சேர்ந்து வந்த சூர்யா இந்த படத்தில் தமிழில், 8 தோட்டாக்கள், சர்வம் தாள மாயம் என இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள இளம் நடிகையுடன் ஜோடி சேர உள்ளார். அபர்ணா மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ஒரு பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.