malaiyalam actress lena shaved the hair

மிக குறைந்த வயதிலேயே நடிகர் பிருத்திவிராஜூக்கு அம்மாவாக கூட நடித்து பிரபலமானவர் நடிகர் லேனா, இவர் நடிகர் தனுஷ் நடித்த அநேகன் படத்தில் டாக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்தவர். 

சமீபத்தில் இவர் இறா என்கிற படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் இவருடைய நடிப்பு அனைவராலும் பேசப்பட்டது. இந்நிலையில் பழனிக்கு சென்று முருகனை தரிசனம் செய்த இவர், தன்னுடைய தலை முடியை முருகனுக்கு காணிக்கையாக செலுத்தியுள்ளார். பொதுவாக நடிகைகள் ஏதேனும் பொருட்களை காணிக்கையாக கொடுத்து அழகில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். 

ஆனால் லோன, தோற்றத்தை பற்றி எதுவும் கவலைப்படாமல் மொட்டையடிதுக்கொண்டது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இவர் மொட்டையுடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட, இதைப்பார்த்த ரசிகர்கள் சிலர் இது புதிய படத்தின் கெட்டப்பா என்று கேட்க ஏன் பழனிமலையில் முருகன் என ஒருவர் இருப்பதை மறந்து விட்டீர்களா என பதில் கொடுத்துள்ளார் லேனா.