பிரபல நடிகர் ஒருவர் உடல்நல குறைவு காரணமாக, மரணமடைந்துள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் ரவி வல்லத்தோல். பல மலையாள படங்களில், தனித்துவமான தன்னுடைய குணச்சித்திர நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் . 67 வயதாகும் இவர், கடந்த சில மாதங்களாகவே உடல் நல பிரச்சனை காரணமாக அவதி பட்டு வந்த நிலையில், இவர் திடீர் என மரணம் அடைந்து விட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கிட்ட தட்ட, 35 வருடங்களாக திரையுலகின் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் இவர், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்.

குறிப்பாக, மலையாளத்தில் முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட சீரியலில் நடித்த நடிகர் என்கிற தனி பெருமையும் இவருக்கு உண்டு. 

மேலும் செய்திகள்: பட வாய்ப்புக்காக இவ்வளவு மோசமா உடலை காட்டி போட்டோ ஷூட் நடத்திய ஸ்ரீ திவ்யா! அதிரவைக்கு உண்மை!
 

இதுவரை 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு, மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. காமெடி வேடமாக இருந்தாலும், எமோஷ்னல் வேடமாக இருந்தாலும் அதில் பொருத்தி நடிக்கும் இவரது திறமையை மலையாள திரையுலகமே வியர்ந்து பாராட்டியுள்ளது.

மேலும் செய்திகள்: சைலெண்டா வளர்ந்து வரும் சாக்ஷி..! கைவசம் இத்தனை படங்களா? அவரே வெளியிட்ட தகவல்!
 

இந்நிலையில் இவர் திடீர் என மரணமடைந்துள்ள சம்பவம், மலையாள ரசிகர்களையும், பிரபலங்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தற்போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், இவருடைய இறுதி சடங்கில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.