புதிய காதலுடன் நெருக்கமாக இருப்பதை முன்னாள் கணவரிடம் போட்டுக் கொடுத்த தனது கார் டிரைவரை பணியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளார் பிரபல முன்னணி நடிகை.

 

பிரபல பாலிவுட் நடிகையான மலாய்கா அரோரா சல்மான் கானின் தம்பி அர்பாஸ் கானை 1998ல் திருமணம் செய்து கொண்டார். 2017ல் அர்பாஸ்கானை விவாகரத்து செய்துவிட்டு மகனுடன் தனியாக வசித்து வருகிறார். கணவரை பிரிந்த அவருக்கும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகன், நடிகர் அர்ஜுன் கபூருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இன்னும் ஓரிரு மாதங்களில் திருமணம் செய்ய முடிவெடுத்து உள்ளனர்.
  
அர்ஜுனுடன் மலாய்கா அரோரா நெருக்கமாக இருப்பதும் இருவரும் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்கிற விஷயமும் அர்பாஸ் கானுக்கு அத்துபடியாய் தெரிய வந்துள்ளது. மலாய்கா அரோராவின் கார் டிரைவர் முகேஷின் சகோதரர் பப்லு தான் அர்பாஸ் கானின் கார் டிரைவராக உள்ளார். இதனால் முகேஷ் தனது காதல் விவகாரங்களை அர்பாஸிடம் போட்டுக் கொடுப்பதாக மலாய்கா உறுதி செய்து கொண்டார்.

மலாய்கா, அர்ஜுனை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டதற்கு சல்மான் கான் வீட்டில் எதிர்ப்பு கிளம்பி வருவதும் அவருக்கு தெரிய வந்தது. இதனையடுத்து கார் டிரைவர் முகேஷை பணி நீக்கம் செய்துள்ளார் மலாய்கா அரோரா. அதேவேளை மலாய்காவை அர்ஜூன் திருமணம் செய்ய போனிகபூர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறாராம்.