திருமணமாகி விவகாரத்து பெற்றுள்ள 45 வயது நடிகை ஒருவரை தற்போது திரையுலகில் பிரபலமாக உள்ள 33 வயது நடிகர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். உயிரே திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தக்க தய்ய தய்யா பாடல் தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் அறிமுகமான ஒன்று. அந்த பாடலில் ரயிலில் இடுப்பை வளைத்து நெழித்து ஆடியவர் மலைக்கா அரோரா. இவர் பிரபல இந்தி நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கானின் மனைவி ஆவார்.

 

கருத்து வேறுபாட்டால் அர்பாஸ் கானிடம் இருந்து விவாகரத்து பெற்ற மலைக்கா அரோரா தற்போது பிரபல நடிகர் அர்ஜூன் கபூருடன் டேட்டிங்கில் உள்ளார். அர்பாஸ் கானுக்கு மனைவியாக இருந்த போதே அர்ஜூன் கபூருடன் ஊர் சுற்றியதே மலைக்கா அரோரா திருமண வாழ்வு முறிய காரணம் என்று சொல்லப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் திருமணத்திற்கு பிறகு எங்கு சென்றாலும் அர்ஜூன் கபூருடன் சேர்ந்து செல்வதை மலைக்கா வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகை மலைக்கா அரோரா – அர்ஜூன் கபூர் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

45 வயதான மலைக்கா அரோராவிற்கு அர்ஹான் கான் எனும் மகன் உள்ளார். ஆனால் அந்த மகன் அர்பாஸ் கானுடன் உள்ளார். இதனால் அர்ஜூன் கபூரை திருமணம் செய்து கொள்வதில் மலைக்காவிற்கு எந்த சிக்கலும் இல்லை என்று சொல்லப்படுகிறது. அதே சமயம் நடிகர் அர்ஜூன் கபூர் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் ஆவார். அதாவது போனி கபூரின் முதல் மனைவிக்கு பிறந்தவர் ஆவார்.

மலைக்கா அரோராவை திருமணம் செய்து கொள்ள அர்ஜூன் கபூருக்கு அவரது தந்தை போனி கபூர் எந்த தடையும் விதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால் ஏற்கனவே ஒரு குழந்தைக்கு தாயான 45 வயது நடிகையை 33 வயது அர்ஜூன் கபூர் விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.