கருப்பன்… குசும்புக்காரன்… என்ற ஒற்றை வசனத்தால் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் மீசை தவசி. தமிழில் பல படங்களில் மாமா, கட்ட பஞ்சாயத்து செய்யும் பெரியவர், ஊர் பூசாரி போன்ற பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு அப்பாவாக நடித்த தன் மூலமாக பிரபலமானார். 

 

இதையும் படிங்க: ஓடிடியில் உலக சாதனை படைக்கப்போகும் ‘சூரரைப் போற்று’... செம்ம குஷியில் சூர்யா ரசிகர்கள்...!

பெரிய மீசையும், தாடியும், கட்ட குரலும் தான் அவருடைய தனிப்பட்ட அடையாளமாகவே ரசிகர்களால்பார்க்கப்பட்டது. தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தவசியை பார்த்து இவரா அது? என ரசிகர்கள் வாய் பிளக்கும் அளவிற்கு மொட்டை தலையுடன், எலும்பும் தோலுமாக பார்க்கவே பரிதாபமான நிலைக்கு மாறியுள்ளார். 

தவசியின் சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் அவருடைய மகன் உதவி கேட்டு தனது தொடர்பு எண், அக்கவுண்ட் எண் உள்ளிட்ட விவரங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதை தொடர்ந்து தவசியின் சிகிச்சைக்கு பலர் தங்களால் முடிந்த உதவியை செய்ய முன்வந்துள்ளனர். முதற்கட்டமாக உணவுக்குழாய் புற்றுநோய் மிகவும் முற்றிய நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.வும், மருத்துவருமான சரவணன் தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலமாக அவருக்கு இலவச சிகிச்சை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார். 

 

இதையும் படிங்க: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் புடவையில்... அஜித் மச்சினிச்சி ஷாமிலி கொண்டாடிய கலக்கல் தீபாவளி...!

நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய ரசிகர்கள் மன்ற தலைவருமான மோகன் மூலமாக தவசி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கே சென்று 25,000 ரூபாய் கொடுத்துள்ளார். இதேபோல் நடிகர் சூரி ரூ.20 ஆயிரம் நிதி உதவி செய்ததாகவும், குடும்பத்தினருக்கும் 3 வேளையும் உணவு வழங்குவதாகவும் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து நடிகர் விஜய்சேதுபதி தனது சகநடிகரான செளந்தர் மூலமாக ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். சுந்தரபாண்டியன் பட பட நடிகரான செளந்தரும் தன் சார்பாக ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார்.