விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோவை தயாரிப்பு நிறுவனம் தற்போது வெளியாகியுள்ளது. படம் குறித்த எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள விக்ரம் படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் கமல் ஹாசனின் ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. நாயகனுக்கு துப்பாக்கி சுடும் காட்சிகள், விஜய்சேதுபதியின் கலக்கல் காட்சி என பிரமிக்க வைக்கும் காட்சிகளை கொண்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மாநகரம் என்ற சிறிய பட்ஜெட் படம் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தற்போது கமல் தற்போது நடித்துள்ள விக்ரம் படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் கமல் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாகவும், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் வில்லங்களாக நடித்துள்ளனர்.

இதில் கமலின் வாரிசாக சூர்யா தோன்றுவதாக கூறப்படும் இந்த படத்தின் தொடர்சியாக வெளியாகவுள்ள அடுத்த படத்தில் சூர்யா தான் நாயகனாக நடிப்பார் என சொல்லப்படுகிறது.விக்ரம் வெளியீட்டு உரிமையை பெற்றுள்ள உதயநிதியின் ரெட்ஜெயண்ட் மூவிஸ் படத்தின் ப்ரோமோஷனை படு வேகமாகவும் பிரமாண்டமாகவும் செய்து வருகிறது.

 இந்த படத்திலிருந்து வேஸ்ட்டேட் என்னும் லிரிக் வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு கேரக்டர்கள் குறித்த போஸ்டரும் வெளியாகியுள்ளது. டிக்கெட் முன் பதிவு துவங்கி விட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ள மேக்கிங் வீடியோ வைரலாகி வருகிறது.

Scroll to load tweet…