makaapaa anand drink issue

சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி வருடம் வருடம் தோறும் நடத்தி வரும் விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. 

இதில் அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சிறந்த சீரியல், நடிகர், நடிகை, தொகுப்பாளர், தொகுப்பாளினி, காமெடியன் என சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து, கௌரவப்படுத்தி இந்த விருதை வழங்கி வருகின்றனர். 

இதில் சிறந்த தொகுப்பாளருக்கான விருது, அந்த தொலைக்காட்சியில் 'இது அது எது' மற்றும் 'சூப்பர் சிங்கர்' போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவருமான, வளர்த்து வரும் நடிகர்களில் ஒருவருமான மா.கா.பா ஆனந்திற்கு வழங்கப்பட்டது.

இந்த விருதை பெற வந்த அவர், செம போதையில் இருந்தது போல் காட்சியளித்தார், மேலும் தொகுப்பாளர் ஒரு கேள்வி கேற்க அவர் ஒரு பதில் கூறி உளறினார். 

இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பியதை பார்த்த பலர் மா.கா.பா செம போதையில் வந்து உளறுகிறார் என கிசுகிசுத்து வருகின்றனர். வலைத்தளங்களிலும் போதையில் பேசுகிறார் மாகாபா என்பது போல் நெட்டிசன்கள் தங்களுடைய கருத்தை பதிவு செய்து வருகின்றனர்.

தற்போது சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரையை நோக்கி தன்னுடைய கவனத்தை செலுத்தி வரும் இவர், ஒரு பொது நிகழ்ச்சியில் இப்படி நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.