mainaa nandhini husband issue

வம்சம் திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் அறிமுகம் கொடுத்து, தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை மைனா என்கிற நந்தினி. தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் இருக்கிறார்.

இந்நிலையில் இவரது கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து பல்வறு பகீர் தகவல்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவம் குறித்து கார்த்திக்கின் நண்பர் பல்வேறு உண்மைகளை வீடியோ மூலம் பதிவு செய்து, நந்தினியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதில் "இல்லற வாழ்வில் சந்தோஷம் இல்லை" என்று, பிரிந்ததாக கூறும் நந்தினி ஏன் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம்மாக இருந்ததை மறைகிறார் என கூறியுள்ளார்.

மேலும் கார்த்தி ஒரு தொழிலதிபர் என தெரிந்தும், அவரிடம் பணம் இருந்ததால் திட்டம் போட்டு கார்த்தியை திருமணம் செய்து ஏமாற்றியுள்ளார் நந்தினி, அதே போல வெண்ணிலாவின் மரணத்திற்கும் காரணம் நந்தினி தான் என குற்றம் சுமாற்றியுள்ளார் அவரது நண்பர்.

தொடர்ந்து பேசிய அவர், நந்தினி நீ எப்படியெல்லாம் கார்த்தியை மடக்கினாய் எங்கெல்லாம் ஊர் சுற்றினாய் என்பது எனக்கு தெரியும், இப்போது நாடகமாடாதே தயவு செய்து கார்த்தியின் காசில் சாப்பிட்டு இருப்பாய் அதற்கு உண்மையாக இரு என கூறியுள்ளார்.