பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகை ஒருவர் உள்ளாடை அணியாமல் முன்னழகு தெரியும் வகையில் டிரான்ஸ்பரன்ட் சட்டையுடன் சிகரெட் குடித்த வீடியோவுக்காக, சமூக ஊடகங்களில் காரசாரமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். நடிகர் மஹிரா கான் கடந்த ஆண்டில், ஜாலியாக சிகரெட் பிடிப்பதுபோன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அவருடன் ரன்பீர் கபூரும் இருந்தார். இந்த வீடியோவுக்காக கடுமையாக அவரை சமூக ஊடகங்களில் பலரும் விமர்சித்தனர். 

இந்நிலையில், ஹிந்தி மீடியம் என்ற படத்தில் நடித்துள்ள நடிகை ஷபா கமர் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர்,  சட்டையை திறந்துவிட்டபடி, ஹாயாக சிகரெட் பிடித்துக் கொண்டு நிற்பதைப் போல இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த புகைப்படங்கள் அவரது புதிய படம் ஒன்றுக்காக எடுக்கப்பட்டவை எனக் கூறப்படுகிறது. இருப்பினும் அவர் டிரான்ஸ்பரன்டான வெள்ளுடை அணிந்துள்ளார். மேலும் அவர் உள்ளாடை எதுவும் அணியவில்லை. இதனால் அவரது முன்னழகு தெரியுவம் வகையில் உள்ளது.

ஆனால் அதனை புரிந்துகொள்ளாமல், இந்த புகைப்படங்களை பதிவிட்டு, பாகிஸ்தான் ரசிகர்களும், இந்தி சினிமா ரசிகர்களும் சராமரியாக ஷபா கமரை விமர்சித்து வருகின்றனர். மகிரா கான் போல நடந்துகொள்வதாக ஷபா கமரை விமர்சித்துள்ள பலரும், முஸ்லீம் பெண் என்பதை மறந்துவிட்டு, எப்படி இவ்வாறு செய்யலாம் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஷபா கமரின் செயல் மிக கேவலமா இருக்கு என்று கூறியுள்ள ரசிகர்கள், முஸ்லீமாக இருப்பதையே அவர் வெட்கப்படச் செய்துவிட்டார் என்றும் தெரிவித்துள்ளனர். அதேசமயம், ஷபா கமருக்கு சக நடிகர், நடிகைகள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர். 

அத்னன் சித்திக் இதுபற்றி கூறுகையில், ஷபா கமர் ஒரு படத்திற்காக, போட்டோஷூட் நடத்தியபோது எடுத்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவிவருகின்றன. அவற்றை வேண்டுமென்றே சிலர் பதிவிட்டு, தவறாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். படப்பிடிப்புக்கும், நிஜ வாழ்க்கைக்கும் சம்பந்தம் இல்லை என்பதை புரிந்துகொள்ளாமல் இப்டி செய்வது தவறு, என்று கூறியுள்ளார். மேலும், முஸ்லீம் என்றாலும், தொழில் வேறு, யதார்த்தம் வேறு என்பதை, ஷபா கமரின் எதிர்ப்பாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அத்னன் சித்திக் தெரிவித்துள்ளார். அதேசமயம், தன் மீதான சர்ச்சைக்கு பதில் அளித்துள்ள ஷபா கமர், விமர்சனம் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து நடிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.