Mahindra founder who heard the car in Rajini poster What did Dhanush say?

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் “காலா” படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளிவந்து வலைதளங்களை அதிர வைத்தன.

ஒரு போஸ்டரில் ரஜினி மஹிந்திரா தார் எஸ்யூவி மீது கெத்தாக உட்கார்ந்திருப்பார். அந்தப் படம் பலபேருடைய மொபைல் போனின் வால்பேப்பராக அலங்கரித்துக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை பார்த்த மஹிந்திரா நிறுவனத்தின் உரிமையாளர் ஆனந்த், அந்த வண்டி தனக்கு வேண்டும் என்றும், அதனை தனது நிறுவனத்தின் மியூசியத்தில் வைக்கப் போகிறேன் எனவும் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.

அதற்கு காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ். "அந்த கார் தற்போது ஷூட்டிங்கிற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது, முடிந்தவுடன் உங்களிடம் அது வந்து சேரும்” என்று டிவிட்டரில் பதிலளித்தார்.