ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் ஆகியோர் நடித்துள்ள படம் ஸ்பைடர்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகி வரும் இப்படத்தில் மகேஷ்பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்நா நடித்துள்ளார். பரத் இப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

அடுத்த மாதம் 27-ஆம் தேது வெளியாகும் இப்படத்தின் 2-வது டீசர் இன்று காலை மணிக்கு வெளியானது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில், அஜித், விஜய், தனுஷ் ஆகிய நடிகர்களின் படங்களுக்கு போட்டியாக வரும் இந்தப் படம் சாதனை படைக்குமா? ரசிகர்களின் வரவேற்பை பெறுமா? என்பதை காத்திருந்து பார்க்கலாம்.

அஜித், விஜய், தனுஷ் ஆகியோருக்கு இருக்கும் மௌசு தமிழகத்தில் மகேஷ்பாபுவுக்கும் இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.