தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ் பாபு, ஏற்கனவே தந்தை பிறந்த நாளில் ஒரு கிராமத்துக்கே, தடுப்பூசி வழங்கியதை தொடர்ந்து தற்போது மகள் சீதாராவின் பிறந்தநாளை முன்னிட்டும் சொந்த செலவில், ஒரு கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு இலவச தடுப்பூசிகள் வழங்கியுள்ளார். இவரது செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

நடிப்பை தாண்டி, ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றுவது, மற்றும் பல்வேறு சமூக பணிகளை செய்வதிலும் முந்தி கொண்டு நிற்பவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. இவர் ஹீல் எ சைல்ட் என்கிற அறக்கட்டளையுடன் இணைந்து பல குழந்தைகளின் இருதய அறுவை சிகிச்சைக்கு உதவியுள்ளார். அதையும் தாண்டி இந்த கொரோனா காலகட்டத்தில், தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்த ஆந்திராவை சேர்ந்த தினக்கூலி மக்களுக்கும் , சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கும் பல உதவிகளை செய்துள்ளார்.

மேலும், இவருடைய குடும்பத்தில் யாருடைய பிறந்தநாள் வந்தாலும்... அதனை பிரமாண்டமாக கொண்டாடுவதை விட பல்வேறு உதவிகள் செய்து கொண்டாடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில் ஏற்கனவே மகேஷ் பாபு தன்னுடைய தந்தையும், பழம்பெரும் தெலுங்கு நடிகருமான கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாளுக்கு ஒரு கிராமத்திற்கே கொரோனா தடுப்பூசியை தன்னுடைய சொந்த செலவில் வழங்கி அவர்களது பாதுகாப்பை உறுதி செய்தார் .

இதை தொடர்ந்து தன்னுடைய மகள் சீதாராவின் 9 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தனது மகள் பெயரில் உள்ள சித்தரபூர் கிராம மக்களுக்கு சொந்த செலவில் இலவசமாக கொரோனா தடுப்பூசியை வழங்கியுள்ளார். கிராம மக்களின் உடல் நலன் மீது அக்கறையோடு மகேஷ் பாபு செய்துவரும் இந்த செயலுக்கு ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவித்து வருகிறது.