mahath sleeping same bed for yashika and aishwarya
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8 ஆவது நாளான நேற்று, நடிகர் பாலாஜியை வெறுப்பேற்ற, நடிகர் மஹத், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நடிகைகள் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா நடுவே படுத்து தூங்கிய சம்பவம் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
மனைவி நித்யாவிற்கு சமையல் அறையில் உதவி செய்து வந்த பாலாஜியை வெறுப்பேற்றும் விதமாக மஹத் வேண்டும் என்றே, ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் ஒரே பெட்டில் படுத்து கொண்டார்.
இவர்களை கண்ணாடி வழியாக கவனித்து, பெட் ரூமிற்கு வந்த பாலாஜி மஹத் இரண்டு பெண்களுடன் படுத்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி, 'ஏய் என்னடா நடக்குது இங்க, அண்ணே 5 நிமிடம் இங்க இல்லனா இப்படியா என கேட்கிறார். பின் ஜனனியும் இவரை பார்த்து முதலில் ஷாக் ஆனாலும் பின் ஜாலியாக பேசிக்கொண்டுருந்தார்.
