பிக்போஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக மஹத்தின் பெயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறது. குறிப்பாக அனைத்து போட்டியாளர்கள் மத்தியில் நடிகை யாஷிகாவை கட்டி பிடித்து முகம் சுழுக்கும் வகையில் நடந்து கொள்வது மற்றும் தவறான வார்த்தைகளை பயன்படுத்துவது என ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறார். 

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பாத்திரங்கள் கழுவும் குழுவில் உள்ள, சென்ராயனை அழைத்து ஒரு கப்பை கையில் கொடுத்து இதை மோர்ந்து பாக்குமாறு கூறுகிறார் டானி.

 

அந்த கப்பை மோர்ந்து பார்த்ததும் கவுச்சி வாடை வருவதாக சென்ராயனும் கூறுகிறார். பின் சமையல் அறைக்கு சென்று இந்த இடத்தில் கப்பை கவுத்து வச்சிருக்க என மஹதிடம் கூறுகிறார் சென்ராயன். இதற்கு நான் இல்லை என மஹத் கூற, அப்பறம் யார் வைத்தார்கள் என கேள்வி எழுப்புகிறார் சென்ராயன்.

 

இதைதொடர்ந்து மஹத் கத்துகிறார். சென்றாயன் பொறுமையாக மஹத்திடம் பேசிய போதும், அவர் மேலும் கோபமாக மாறி, சென்ராயனை லூசு, கிறுக்கு என மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டுவது போல் காட்டப்படுகிறது. பின் சென்ராயனை மும்தாஜ் சமாதானம் செய்து அந்த இடத்தில் இருந்து அழைத்து செல்கிறார்.