பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துகொண்டிருக்கும் 16 பிரபலங்களில் மஹத்தும் ஒருவர். இவர் விஜய்யுடன் ”ஜில்லா” படத்திலும், அஜீத்துடன் ”மங்காத்தா” படத்திலும் நடித்திருக்கிறார். இவர் நடிகர் சிம்புவின் உயிர் நண்பரும் கூட. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூட கமலஹாசன் குறித்து, சிம்பு பெருமையாக கூறும் விஷயங்களை மேடையில் பதிவு செய்திருந்தார் மஹத்.

மேலும் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு, தன் நண்பனை மிகவும் மிஸ் செய்வதாகவும் இவர் பல முறை தெரிவித்திருக்கிறார். இந்த பிக் பாஸ் வீட்டில், இவர் தான் அடுத்த ஆரவாக வர வாய்ப்பிருக்கிறது, என நெட்டிசன்கள் கூட கணித்திருந்தனர். ஆனால் மஹத் மருத்துவத்தில் சிக்காமல், கிச்சனில் வெங்காயம் வெட்டி அந்த  பிரச்சனையில் தான் முதலில் அவஸ்தை பட்டார்.

அதனை தொடர்ந்து பெண்கள் அறையில் சென்று, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யாவிற்கு நடுவில் படுத்து உறங்கி, மக்கள் மத்தியில் விமர்சனத்துக்கும் ஆளானார். பெரும்பாலான நேரங்களில் நல்ல பையனாக இருந்தாலும், சில சின்ன சின்ன குறும்புத்தனங்களையும் செய்து வரும் இவர் , பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த பிறகும் கூட தன்னுடைய சில கருத்துக்களில் மாறாமல் செயல்பட்டு வருகிறார்.

 சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் ஒரு பாடலுக்கு நடனமாடும் படி டாஸ்க் கொடுக்கப்பட்டது. அப்போது தனுஷ் பட பாடல் ஒலிக்கப்பட்டது. அந்த பாடலுக்கு நான் ஆடமாட்டேன் சிம்பு பட பாடல் போடுங்க. என பிடிவாதமாக இருந்து கடைசியில் சிம்பு பாடலுக்கு தான் ஆடினார் மஹத்.

தனுஷ் மற்றும் சிம்பு இடையே ஆரம்பம் முதலே ஒரு பனிப்போர் நடந்துவருகிறது. இதனால் சிம்பு ரசிகர்களுக்கு தனுஷ் மீது அவ்வளவாக ஈர்ப்பு கிடையாது. அப்படி இருக்கையில் சிம்புவின் உயிர் நண்பன் மஹத் இவ்வாறு நடந்து கொண்டது சகஜம் தானே…!