திரையரங்கம் சென்று படம் பார்ப்பதை, நடுதர மக்கள் தவிர்க்க முக்கிய காரணம் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்றால் குறைந்த பட்சம் ரூ.1000 செலவு செய்ய வேண்டும் என்பது தான்.

குறிப்பாக படம் பார்க்க எடுக்கப்படும் டிக்கெட்டின் விலையை விட, அங்கு குழந்தைகளுக்கு நொறுக்கு தீனி வங்கித் தர செலவு செய்யும் தொகை அதிகம். சாதாரண திரையரங்களை விட மல்டிப்ளக்ஸ் தியேட்டர் என்றால் செலவு எக்கச்செக்கம். இதெல்லாம் நினைத்து ஒரு நிலையில் படம் பார்க்கும் ஆசையே பலருக்கு போய் விடுகிறது.

இந்நிலையில் மஹாராஷ்டிராவில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் மற்றும் சினிமா ஹால்களில் படம் பார்க்க வரும் ரசிகர்கள் தண்ணீர் பாட்டீல் கூடகொண்டு செல்ல முடியாத நிலையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

 மேலும் தியேட்டர் வளாகத்திற்குள் விற்கப்படும் நொறுக்கு தீனிகளை தான் வாங்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இதனை எதிர்த்து ஒருவர் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் இந்த வழக்கை விசாரித்த  மஹாரஷ்டிரா அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பி, விலையை ஒழுங்குப்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

இதையடுத்து மஹாராஷ்டிரா அரசு சட்டம் திருத்தம் கொண்டு வந்துள்ளது. தற்போது மஹராஷ்டிரா சட்டசபை மழைக்கால கூட்டத்தொடரில் சட்ட திருத்தம் இயற்றப்பட்டது. 

இனி வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் தியேட்டர்களின் புதிய முறை அமல்படுத்தபடஉள்ளதாகவும், அதன்படி தியேட்டர் வரும் ரசிகர்கள் தங்களது வீட்டிலிருந்தே நொறுக்குத்தீனி, ஸ்நாக்ஸ் போன்றவற்றை கொண்டு வரலாம் என தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைதுள்ளனர்.