Mahaan Review :கவுத்திவிட்ட ஜகமேதந்திரம்! கார்த்திக் சுப்புராஜுக்கு மகுடம் சூட்டியதா மகான்?- Twitter விமர்சனம்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம், பாபி சிம்ஹா, சிம்ரன் நடிப்பில் நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி இருக்கும் மகான் படத்தின் டுவிட்டர் விமர்சனம்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள படம் ‘மகான்’.
விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சிம்ரன், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மகான் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படம் இன்று நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
நட்புக்குள் எற்படும் தகராறினால் மூன்று நண்பர்கள் பிரிகின்றனர். அவர்கள் மூவரும் பல வருடங்களுக்கு பின்பு வெவ்வேறு சூழலில் சந்திக்கின்றார்கள். அதன் பின் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கதைச்சுருக்கம்.
இந்தப்படத்தை பார்த்த ரசிகர்கள் படம் வேற லெவலில் இருப்பதாக டுவிட்டரில் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த படத்தில் விக்ரமும் அவரது மகன் துருவ்வும் போட்டி போட்டு நடித்துள்ளதாகவும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்படத்தில் வாணி போஜன் நடித்துள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் நடித்த காட்சிகள் ஒன்றுகூட படத்தில் இல்லாதது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்...