mageshbabu pramochavam dubbing release

தெலுங்கில் மகேஷ் பாபு, காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடிப்பில் 2௦16 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிரமோற்சவம். தமிழில் அனிருத் என்ற பெயரில் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. பத்ரகாளி பிலிம்ஸ் தயாரிக்க, இயக்குநர் ராஜராஜ சோழன் இயக்குகிறார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை ஏ.வி.எம். தியேட்டரில் நேற்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் ராஜராஜ சோழன், “தெலுங்கிலிருந்து தமிழில் டப்பிங்கில் வெளிவரும் இப்படத்திற்குத் தயாரிப்பாளர் அனிருத் என்று பெயரிட்டார்.


ஆனால் நான் அனிருத் பெயர் நன்றாக இல்லை என்று சொன்னேன். பின்னர் படத்தின் டைட்டிலை டிசைன் செய்து பார்த்த போது தான் எனக்கு நம்பிக்கை வந்தது. டைட்டில் போஸ்டரை என் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதோடு அனிருத் அக்கவுண்டிற்கும் அனுப்பி வைத்தேன்” என்றார்.