தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு இன்று தன்னுடைய 45 ஆவது பிறந்தநாளை மிகவும் எளிமையாக வீட்டிலேயே கொண்டாடினாலும், இவருடைய வெறித்தனமான ரசிகர்கள் #HBDMaheshbabu என்கிற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் வைரலாக்கி விட்டனர். இதுவரை சுமார் 40 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டுகள் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. 

இந்நிலையில் இந்த கொரோனா லாக் டவுன் நேரத்தில் பிரபலங்களை துடிதுடிப்புடன் வைத்து கொள்ள, பல சவால்கள் விடுக்கப்பட்டு வந்தது போல், அனைத்து பிரபலங்களையும் மிகவும் கவர்ந்தது கிரீன் இந்தியா சேலஞ். இதன் மூலம் பிரபலம் ஒருவர் மரக்கன்று நட்டு விட்டு, அந்த புகைப்படத்தை வெளியிட்டு மூன்று பிரபலங்களுக்கு இதுபோல் செய்து முடிக்க சவால் விட வேண்டும்.

இந்த கிரீன் இந்தியா சேலஞ்சில் தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு பங்கேற்றுள்ளார் மகேஷ் பாபு. இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது, தனது பிறந்தநாளை கொண்டாட இதை விட சிறந்த வழி கிடையாது. இந்த சவாலை நான் ஜூனியர் என்.டி.ஆர், தளபதி விஜய், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோருக்கு விடுப்பதாக கூறியுள்ளார்.

எனவே இந்த சவாலை விஜய் ஏற்பாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் உள்ளது. விஜய் இந்த சவாலை ஏற்று செய்து விட்டால், இது தமிழகத்திலும் அதிகம் பகிரப்படும் ஒரு சவாலாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Scroll to load tweet…