40 வயதை எட்டி விட்டாலே பிபி, சுகர், உள்ளிட்ட பிரச்சனைகள் நம்பை சீண்டி பார்க்க தயாராக இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் மாரி வரும் உணவு முறைகள் மற்றும் பழக்க வழக்கங்கள் எனலாம். நாகரீகம் என்கிற பெயரில் முன்னோர்களின் பழக்க வழக்கங்கள், உணவு வகைகளை மறந்து விட்டோம் என்பது மறுக்க முடியாத உண்மை. 

எனவே தற்போது 100 வயது கடந்தவர்களை பார்ப்பதோ மிக அரிதாக மாறிவிட்டது. அந்த வகையில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் மகேஷ் பாபுவிற்கு தெலுங்கு மற்றும் இன்றி உலகம் முழுவதிலும் பல ரசிகர்கள், ரசிகைகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் 106 வயது பாட்டியாம்.

ராஜமுந்திரியைச் சேர்ந்த ரேலங்கி சத்யவதி என்ற 106 வயது பாட்டி மகேஷ் பாபுவின் தீவிர ரசிகை என்று அறிந்ததும். மகேஷ் பாபு அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் நேரடியாக அவர் இருக்கும் இடத்திற்கே சென்று அந்தப் பாட்டியின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறார்.  அந்த பாட்டியும் மகேஷ் பாபுவுடன் மிகவும் மகிழ்ச்சியாகப் பேசினார். 

சிறு வயது குழந்தைகள் நடிகர்களுக்கு ரசிகர்களாக இருப்பது சாதாரண விஷயம் தான். ஆனால், 100 வயதை கடந்த வயதுடைய ஒரு பாட்டி இளம் நடிகர் ஒருவருக்கு ரசிகையாக இருப்பது பெரிய விஷயம் என ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். மேலும் மகேஷ் பாபுவின் இந்த செயலையும் பலர் பாராட்டி வருகிறார்கள்.