இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் முதல் முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'தர்பார்'. இந்த படத்திற்காக இப்போது செம்ம வெயிட்டிங்கில் உள்ளனர் ரஜினி ரசிகர்கள்.

அதே நேரத்தில், இந்த வருடம் பொங்கல் ரிலீஸ் லிஸ்டில் எந்தெந்த படம் இணைய போகிறது, எது பின்வாங்க போகிறது என தெரிந்து கொள்வதிலும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் தலைவரின் படம் ரிலீஸ் ஆகும், ஜனவரி 9 அன்று, மகேஷ்பாபுவின் ‛சாரிலேரு நீகவரு' படமும் தெலுங்கில் வெளியாகிறது. நீண்ட இடைவேளைக்குப்பின் விஜயசாந்தி ரீ-என்ட்ரி கொடுத்துள்ள இந்த படத்தில் ராஷ்மிகா நாயகியாக நடித்திருக்கிறார்.

தமிழில் மகேஷ் பாபு டஃப் கொடுக்கவில்லை என்றாலும், அமெரிக்காவில் தலைவருடன் மோத உள்ளார். அதாவது, சூப்பர் ஸ்டாரின் திரைப்படங்கள் எப்படி அமெரிக்காவில் அதிக திரையரங்கங்களில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளாரோ அதே போல் அமெரிக்காவில் மகேஷ் பாபுவின் திரைப்படத்தையும் அதிகமாக வெளியிட  முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால், இந்த பொங்கல் அதிரடி சரவெடி பொங்கலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.