தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. தெலுங்கில் மிக பெரிய ரசிகர்கள் பட்டாளமே இவருக்கு உள்ளது. 

நடிப்பதையும் தாண்டி, தன்னால் முடிந்த சமூக பணிகள் போன்றவற்றை செய்து  வருகிறார். மேலும் பட பிடிப்பு இல்லாத நேரத்தில், தன்னுடைய ரசிகர்களை சந்தித்து அதிர்ச்சி கொடுப்பார். சமீபத்தில் இவர் ஒரு சிறுமியின் அறுவை சிகிச்சைக்காக உதவியது, பலரது பாராட்டையும் பெற்றது.

இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மகள் சித்தாரா, கண்ணா நீ தூங்கடா கண்ணா நீ தூங்கடா என்ற பாடலுக்கு கியூட்டாக நடனமாடியதை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மகேஷ் பாபுவின் மகள்... நடன வீடியோ இணையத்தில் லட்ச கணக்கான பார்வையாளர்களை கடந்துள்ளது வைரலாகி வருகிறது.