Asianet News TamilAsianet News Tamil

முதல் பட ஹிட்டுக்குப் பின்னர் எட்டு வருடங்கள் எடுத்துக்கொண்ட ‘மகாமுனி’சாந்தகுமார் என்னதான் செய்துகொண்டிருந்தார்?...

இயக்குநர் சாந்தகுமாரின் முதல் படம் 2011ல் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையிலும் அவரது அடுத்த படம் ‘மகா முனி’ரிலீஸாக எட்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டது குறித்து அவர் துளி கூட கவலைப்படவில்லை. இந்த இடைவெளியில் தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்ஸில் ஒரு பைக் வாங்கிக்கொண்டு இந்தியா முழுக்க சுற்றினேன். அந்தப் பயணங்களின்  அனுபவத்தில்தான் எனது அடுத்த கதையே பிறந்தது என்கிறார் 

magamuni director santhakumar interview
Author
Chennai, First Published Sep 4, 2019, 10:03 AM IST

இயக்குநர் சாந்தகுமாரின் முதல் படம் 2011ல் ரிலீஸாகி மாபெரும் வெற்றி பெற்ற நிலையிலும் அவரது அடுத்த படம் ‘மகா முனி’ரிலீஸாக எட்டு வருடங்கள் ஆகியிருக்கிறது. இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டது குறித்து அவர் துளி கூட கவலைப்படவில்லை. இந்த இடைவெளியில் தயாரிப்பாளர் கொடுத்த அட்வான்ஸில் ஒரு பைக் வாங்கிக்கொண்டு இந்தியா முழுக்க சுற்றினேன். அந்தப் பயணங்களின்  அனுபவத்தில்தான் எனது அடுத்த கதையே பிறந்தது என்கிறார்.magamuni director santhakumar interview

‘மவுன குரு’ என்ற தரமான படத்தை இயக்கியபின்னர் 8 வருட இடைவெளிக்குப்பின் ஆர்யாவை கதைநாயகனாக வைத்து இயக்கியிருக்கும் படம் ‘மகா முனி’. இந்த டைட்டில் ஆர்யாவுக்கு மேட்ச் ஆகிறதோ இல்லையோ சாந்தகுமாருக்கு அவ்வளவு பொருத்தம். பட ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில் தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டி அளித்திருக்கும் சாந்தகுமார் ஒரு சினிமா முனிவர் போலவே உரையாடியிருக்கிறார்.magamuni director santhakumar interview

மவுனகுருவுக்கும் மகாமுனிக்கும் இடையில் விழுந்த 8 வருட இடைவெளி குறித்து அவரிடம் யார் குறித்தும் எந்தப் புகாரும் இல்லை. செம ஜாலியாகப் பயணம் செய்துகொண்டே மக்களை அவர்களுக்குப் பக்கத்தில்போய் ரசித்துக்கொண்டிருந்தேன் என்கிறார். அடுத்த படமும் இதே தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்குத்தான் செய்யப்போகிறேன் என்கிறவரிடம் ‘அவர் சூர்யாவை வைத்து அடுத்த படம் இயக்கச்சொன்னால்? என்று கேட்டால் முரட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்க்கிறார் சாந்தா.’சூர்யா இல்லை வேறு எந்த நடிகருக்காகவும் கதை எழுதவே மாட்டேன். நான் எழுதுற கதைக்கு பொருந்திப்போற நடிகர்களை வச்சித்தான் படம் பண்ணுவேன்.’மவுன குரு’ கதையைக் கூட, அவர் கேட்டு, முதல் ஆளா நான் விஜய்க்குத்தான் சொன்னேன். இந்தக் கதை செட் ஆகுமா இன்னொரு கதை பண்ணுங்களேன்னு கேட்டார். நான் பண்ணலை. அடுத்து படம் கிடைக்காம 5 வருஷம் சும்மா சுத்திக்கிட்டு இருந்தேன். ஆனா விஜய்க்காக இன்னொரு கதை பண்ணி சொல்லியிருக்கலாமோன்னு ஒருநாள் கூட வருத்தப்பட்டதில்லை.ஒரு கேரக்டரை எழுதி அதற்கு அந்த நடிகர் பொருந்திப்போவாரா என்று பார்ப்பேனே ஒழிய எந்த நடிகருக்காகவும் கதை எழுத மாட்டேன்’என்று ஒரு இயக்குநருக்குத் தேவையான கம்பீரத்தோடு கூறுகிறார் ‘மகாமுனி’ சாந்தகுமார்.’என்கிறார் மகா குரு சாந்தகுமார்.

Follow Us:
Download App:
  • android
  • ios