Magale En Marumagale Today Episode Muthu Funeral Function : மகளே என் மருமகளே சீரியலில் கட்டிய தாலியின் ஈரம் கூட முழுவதுமாக காய்வதற்குள்ளாக கணவனை இழந்த துளசியின் நிலை பற்றி இன்றைய தொகுப்பில் பார்க்கலாம்.
Magale En Marumagale Today Episode Muthu Funeral Function : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் மகளே என் மருமகளே. கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் மகளே என் மருமகளே என்ற சீரியலானது ஒளிபரப்பு செய்ப்பட்டு வருகிறது. தற்போது வரை 24 எபிசோடுகளை கடந்துள்ளது. சீரியலின் முதல் எபிசோடில் ஹீரோ, ஹீரோயின் எண்ட்ரியோடு தொடங்கி காதல் மலர ஆரம்பித்தது. ஆனால், அதற்குள்ளாக சீரியலின் டைட்டிலுக்கு ஏற்ப மருமகளை தேடிப்பிடிக்க ஆரம்பித்த மாமியார், மகனுக்கு கல்யாண ஏற்பாடுகளையும் செய்தார். கல்யாணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆனால், அவர் கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள்ளாக கரண்ட் ஷாக் அடித்து ஹீரோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.
சீரியலின் ஹீரோயினுக்கு கழுத்தில் தாலி மட்டுமே கட்டிய ஹீரோ அவருக்கு அந்த சந்தோஷத்தை தான் கொடுத்தார் என்று கூறிய மாமியார், மருமகளுக்கு பூவையும் பொட்டையும் கொடுத்தார். மகளே என் மருமகளே என்ற சீரியலில் அவினாஷ் அசோக் முத்துவேல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தான் சீரியலின் முதல் ஹீரோ. அதன் பின்னர் வர்ஷினி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். நவின் குமார் சின்னத்தம்பி ரோலில் நடித்துள்ளார். ரேஷ்மா பசுபுலேட்டி நாச்சியார் ரோலில் நடித்துள்ளார்.
இந்த சீரியலானது ஸ்டார்மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகுவா ஓ மகுவா என்ற சீரியலின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வர்ஷினி சுரேஷ் இதற்கு முன்னதாக நீ நான் காதல் என்ற சீரியலில் நடித்துள்ளார். அந்த சீரியலில் பணக்கார வீட்டு பெண்ணாக படித்து வேலை பார்க்கும் பெண் ரோலில் நடித்திருந்தார். தற்போது மகளே என் மருமகளே என்ற சீரியலில் ஒரு நடுத்தர வீட்டு பெண் ரோலில் நடித்துள்ளார். ஆனால், ரேஷ்மா பசுபுலேட்டி பணக்கார வீட்டு பெண்ணாகவும் ஊருக்கு நாட்டாமை அதாவது பஞ்சாயத்து சொல்லும் அபிராமி நாச்சியார் என்ற ரோலில் நடித்துள்ளார். இவரது மகன் தான் நவீன் குமார். முத்து என்ற ரோலில் நடித்துள்ளார். அவினாஷ் அசோக் சின்னத்தம்பி என்ற ரோலில் அபிராமி வீட்டு வேலைக்காரனாக நடித்து வருகிறார்.
இந்த சீரியலானது மாமியார் மற்றும் மருமகள் இடையிலான கதையை மையப்படுத்திய சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
