2010ல் வெளிவந்த ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’க்கு அப்புறம் சொல்லிக்கொள்ளும்படி உருப்படியான ஹிட்கள் கொடுக்காத ஆர்யாவுக்கு அவரது அடுத்த ரிலீஸான ‘மகா முனி’ திருப்பு முனையாக அமைப்பு வாய்ப்புள்ளதாக அப்படத்தின் வித்தியாசமான டீஸர் உணர்த்துகிறது.

கடந்த 2011ம் ஆண்டு அருள்நிதி, இனியா நடிப்பில்  வெளியான படம் ‘மௌன குரு. இந்தப் படத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதனால் அப்படத்தை இயக்கிய சாந்தகுமாருக்கு நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால் எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்த அவர் இப்போது திரும்ப வந்திருக்கிறார்.

ஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா நடிப்பில் உருவாகியுள்ள ‘மகாமுனி‘ படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.   எஸ்.எஸ்  தமன் இசையமைத்துள்ள இப்படத்தில்  ஜுனியர் பாலையா, ஜெய ப்ரகாஷ், அருள் தாஸ், ஜி எம் சுந்தர், காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை இன்று காலை 10.30 மணிக்கு வெளியிட்டனர்.அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டீஸரையும் அவரது மனைவி ஆயிஷா முதலில் வியக்க தற்போது மொத்த கோடம்பாக்கமும் பாராட்டித் தள்ளிக்கொண்டிருக்கிறது. ட்விட்டர் தளத்தில் இயக்குநர் சாந்தகுமாருக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் வாழ்த்துகள் குவிகின்றன.பத்து வருடங்களுக்குப் பிறகு பழையபடி ஆர்யா ஒரு ஹிட் கொடுப்பாரா?