தமிழகக் காவல் துறை மாற்று போக்குவரத்து காவல்துறை வாகன போட்டிகளுக்கான நற்செய்திகளையும் மீம் வடிவில் பரப்பும் நோக்கில், சமூக ஊடகப் பிரிவில் மீம்களை உருவாக்கி வருகின்றனர். இந்த மீம்கள் நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இதற்காக அந்தந்த மாவட்ட காவல் துறை ஃபேஸ்புக் பக்கத்தை உருவாக்கி மீம்களை வெளியிட்டு வருகின்றனர். 

அஜித் நல்ல நடிகர் என்பது மட்டுமில்லாமல், நல்ல மனிதர் என்ற புகழும் இருப்பது அனைவரும் அறிந்ததே. அண்மையில் விஸ்வாசம் படத்தின் டிரைலர் வெளியானது. இதனை ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களும் கொண்டாடினார்கள். மதுரை சுற்றுவட்டார கதையை கொண்டு படம் எடுக்கப்பட்டிருப்பது உறுதியாகிவிட்டது.

அஜித்துக்கு சினிமா பிரபலங்கள் மட்டும்லல, அரசு ஊழியர்களும் ரசிகர்களாக இருப்பது அனைவரும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று மதுரை மாவட்ட போக்குவரத்து காவல் துறை மக்களுக்கு அனுப்பிய வாழ்த்து செய்தியில் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் டயலாக் போல புகைப்படத்துடன் " மதுரை போக்குவரத்து போலீஸ் சார்பாக அனைவருக்கும் மகிழ்ச்சியான புதிய ஆண்டு மாலை மற்றும் பாதுகாப்பான கொண்டாட்டங்களுக்கு நல்வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

Madurai City Traffic Police wishes everyone a safe and happy new year celebration. 
Enjoy the new year night safely" என்ற மீம்ஸ் செய்தியை வாழ்த்துக்களாக மதுரை டிராபிக் போலீஸ் என்ற பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  
மதுரை போக்குவரத்து காவல்துறையின் வாழ்த்து செய்தியால் அஜித் ரசிகர்கள் குஷியாகிவிட்டனர்.