தமிழ் சினிமாவில் மெகா பட்ஜெட் படங்களைத் தயாரித்துவரும் லைகா தயாரிப்பு நிறுவனம் தனது அடுத்த படமான காப்பானை ரிலீஸ் மதுரையின் பிரபல கட்டப்பஞ்சாயத்து ஃபைனான்சியர் அன்புச் செழியனின் உதவியை நாடியுள்ளது. இதனால் அந்நிறுவனத்தின் முந்தைய படங்களை வாங்கிய விநியோகஸ்தர்கள் டென்சன் அடைந்துள்ளானர்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா,ஆர்யா,மோகன்லால், சாயிஷா நடித்துள்ள படம் ‘காப்பான்’.இப்படம் கடந்த ஆகஸ்ட் மாதத் துவக்கத்திலேயே திரைக்கு வர இருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான லைகாவின் முந்தைய படம் 2.0வை வாங்கியிருந்தவர்கள் நஷ்ட ஈடு கோரி பஞ்சாயத்து செய்து வந்தனர். ‘காப்பான்’படத்தை ‘2.0’பட நஷ்டத்தைக் கழித்துக்கொண்டு குறைந்த விலைக்குத் தரவேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருந்தது. இதே போல ‘2.0’படத்தின் கேரள உரிமையை வாங்கியிருந்தவரும் அப்படத்துக்கான நஷ்டத்தை காப்பானில் கழிக்கச் சொல்லி கேரள விநியோகஸ்தர் சங்கத்தில் புகார் செய்திருந்தார்.

இது தொடர்பான பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் பஞ்சாயத்துப் பார்ட்டிகள் அத்தனை பேரையும் மடக்க, மிகப்பெரிய கட்டப்பஞ்சாயத்துப் பார்ட்டியான மதுரை அன்புச் செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் நிறுவனத்துக்கு 20 கோடிக்கு மொத்தமாக விற்றுவிட்டதாக ஒரு தகவலை அதிகாரபூர்வமாக ரிலீஸ் செய்து அத்தனை விநியோகஸ்தர்களின் வாயையும் அடைத்திருக்கிறது லைகா நிறுவனம். கமலின் ‘இந்தியன் 2’, ரஜினியின் ‘தர்பார்’,’காப்பான்’ என்று தற்போது மட்டும் தமிழ் சினிமாவில் 1000 கோடியை விதைத்திருக்கும் லைகாவின் நிலை பரிதாபத்துக்குரியதுதான்.