நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் ஹிட்டத்தை தொடர்ந்து  அஜித், இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் வலிமை. இந்த படத்தின் ஷூட்டிங் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலும், சில பைக் சேசிங் காட்சிகள் சென்னை புறநகர் பகுதியிலும் நடைபெற்றது. கொரோனாவால் படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி வருகிறது. 

 

இதையும் படிங்க: அப்பாவுடன் விஜய் பேசாததற்கு காரணம் இதுதான்... உண்மையை ஓபனாக போட்டுடைத்த அம்மா ஷோபா...!.

இதில் செம்ம எங் அண்ட் ஃபிட் லுக்கில் தல அஜித் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. ஃபிட்னஸில் வேற லெவலுக்கு மெருகேறி எங் லுக்கில் இருக்கும் தல அஜித்தின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.  வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் அஜித்திற்கு ஈஸ்வரமூர்த்தி ஐபிஎஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து ட்விட்டரில் நேற்று  #ஈஸ்வரமூர்த்திIPS என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் தேசிய அளவில் ட்ரெண்ட் செய்தனர். 

 

இதையும் படிங்க:  காதல் கணவருடன் ஹனிமூன் புறப்பட்ட காஜல் அகர்வால்... வைரல் போட்டோ...!

ஆனால் படத்தை அறிவிப்பு செய்ததோடு சரி,  வேறு எந்தவித அப்டேட்டில் படக்குழு வெளியிடவில்லை. இதனால் மொத்த அஜித் ரசிகர்களும் படக்குழு மீது செம கடுப்பில் இருந்து வருகின்றனர். படம் பற்றிய அப்டேட்டை வெளியிடுமாறு தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகின்றனர். இதனால் பொறுத்து பொறுத்து பொங்கிய மதுரையில் இருக்கும் அஜித் ரசிகர்கள்,  “கொய்யால வலிமை அப்டேட் விடு, இல்லைனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடு” என்ற வாசகத்துடன் போஸ்டர் ஓட்டியுள்ளனர்.