தமிழ் நாட்டில் தற்போது உள்ள அரசியல் நிலைமை குறித்து நடிகர், நடிகைகள் பலர் தங்களுடைய கருத்துக்களை இணையத்தளத்தில் பதிவிறக்கி வருகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதில் முக்கியமானவர்கள் நடிகை குஷ்பூ, கமல்ஹாசன், அரவிந்த்சாமி, மாதவன், சூர்யா, ஸ்ரீப்ரியா,போன்ற பலர், ஒரு இந்திய குடிமகனாக அரசியல் குறித்து சொல்லும் கருத்துக்களுக்கு சில நெட்டிசன்கள் நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டாம் என கூறிவருகின்றனர். 

தற்போது அதற்கு நடிகர் மாதவன் பதிலடி கொடுத்துள்ளார். "தமிழ்நாட்டின் நலனில் அக்கறை கொண்டதால் தான் அரசியல் பற்றி கருத்து கூறுகிறோம், அதற்காக அரசியலில் நுழைவதற்காக தான் இப்படி செய்கிறோம் என கருதவேண்டாம்" என் கூறியுள்ளார்.

மேலும் அரசியல் பற்றி கருத்து கூறுவது ஒவ்வொரு குடிமகனுடைய கடமை, முதலில் நான் ஒரு இந்தியன் பிறகு தான் நடிகன் என்பது போல தெரிவித்துள்ளார்.