ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தனுஷின் ‘மாரி 2’ படப்பிடிப்பு ஆரம்பமாகிவுள்ளது.

இயக்குநா் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் இணைந்து நடித்த படம் ‘மாரி’. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மேலும் தனுசுக்கும் மாஸ் லுக்கை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தனுஷின் ரசிகர்கள் கடந்த சில மாதங்களாகவே மாாி படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து காத்திருப்பதாக டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்தனராம்.

ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட இயக்குநர் பாலாஜி மோகன் மற்றும் தனுஷ், விரைவில் ‘மாரி 2’ படம் உருவாகும் என்று ரசிகர்களிடம் தெரிவித்தனர்.

அதன்படி நேற்று இயக்குநர் பாலாஜி மோகன் ‘மாரி 2’ படம் குறித்த அறிவிப்பை டிவிட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தப் படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்ததாகவும், விரைவில் படப்பிடிப்புத் தொடங்கவுள்ளதாகவும் கூறியிருந்தாா்.

மாாி படத்தில் நடித்த அதே தனுஷ், காஜல் அகர்வால் ஜோடி ‘மாரி 2’ படத்திலும் நடிப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் படம் பற்றிய முழு விவரமும் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் பாலாஜி மோகன்.