Asianet News TamilAsianet News Tamil

Maanaadu : ஹிந்தியில் ரீமேக் ஆகும் மாநாடு? மாநாடு ப்ரோமோஷனுக்காக படக்குழு செய்த மாஸ் ஐடியா!!

Maanaadu : மாநாடு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் விதமாக பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

maanaadu movie screened for Bollywood stars!
Author
Chennai, First Published Dec 7, 2021, 12:26 PM IST

ரசிகர்களின் பல ஆண்டு எதிர்பார்ப்பாக இருந்த சிம்புவின் மாநாடு கடந்த நவம்பர் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழில் அதிகம் வெளிவராத, டைம் லூப் ஜர்னரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை யாரும் எதிர்பாராத பல ட்விஸ்டுகள் மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை உள்ளடக்கி, மிகவும் புத்திசாலித்தனமாக கதைக்களம் அமைத்துள்ளார் வெங்கட் பிரபு என தொடர்ந்து இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 எஸ்.ஜே .சூர்யாவை தவிர இந்த கதாபாத்திரத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது என ரசிகர்கள் நினைக்கும் அளவுக்கு, வில்லத்தளத்தில் மிரட்டியுள்ளார். ஒட்டு மொத்த படக்குழுவும் இந்த படத்திற்காக எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளனர் என்பதும் நன்றாகவே தெரிகிறது.  இப்படம் வெளியான இரண்டே நாட்களில் ஐஎம்டிபியில் 10க்கு 9.6 ரேட்டிங்கையும் பெற்றிருந்தது.

maanaadu movie screened for Bollywood stars!

ஏற்கனவே இந்த படம் வெளியாகி  இரண்டே நாட்களில் சுமார் ரூ.15 கோடி வசூலித்ததாக  படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து தற்போது சிம்புவின் மாநாடு ரூ. 75.50 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே மாநாடு இரண்டாம் பாகம் உருவாக்கப்படும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்திருந்த நிலையில் சமீபத்தில் மாநாடு படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் விதமாக பாலிவுட் நட்சத்திரங்கள் மத்தியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்வில்  நடிகர் சிம்பு, இயக்குனர் வெங்கட் பிரபு,  தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் பிரேம்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.   

Follow Us:
Download App:
  • android
  • ios